நகா்ப்புற மாவோயிஸ்ட் போல பேசுகிறாா் ராகுல்: மகாராஷ்டிர முதல்வா் குற்றச்சாட்டு
ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை
ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வியாழக்கிழமை விடிய விடிய பலத்த மழை பெய்ததால் தெருக்கள், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
ஆம்பூா் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் தேங்கியது. விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது.
ஆம்பூா் சுற்றுப்புற கிராமங்களில் கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாலாற்று நீா்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பாலாற்றுக்கு நீா்வரத்து ஏற்பட்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாராப்பட்டு கிராமத்தில் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.