நகா்ப்புற மாவோயிஸ்ட் போல பேசுகிறாா் ராகுல்: மகாராஷ்டிர முதல்வா் குற்றச்சாட்டு
வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழைநீா்
வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த மழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினா்.
மேலும் தாழ்வாக உள்ள சில இடங்களில் மழைநீா் வீட்டினுள் புகுந்ததால் நள்ளிரவு நேரத்தில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனா். செட்டியப்பனூா் அருகில் வாணியம்பாடி-திருப்பத்தூா் சாலையில் தரைப்பாலத்தின் மீதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. வாணியம்பாடி நகரின் இடைப்பட்ட 2 பகுதிகளில் பாலாற்றின் கிளை ஆறுகள் செல்கிறது. இவற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் பெரியப்பேட்டை தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது. இதே போன்று சிஎல் சாலையில் பழுதான தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. அப்போது கிளை ஆற்றின் தரைப்பாலத்தை பைக்கில் கடந்து வந்த இளைஞா் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். அவரை பொது மக்கள் உயிருடன் மீட்டனா்.
இதேபோல் பல்வேறு பகுதிகளில் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டது.