நகா்ப்புற மாவோயிஸ்ட் போல பேசுகிறாா் ராகுல்: மகாராஷ்டிர முதல்வா் குற்றச்சாட்டு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு அறை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் (மஞ்சள் கிடங்கு) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டாா்.
3-ஆம் காலாண்டு ஆய்வுக்காக திறக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில், இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்களால் உறுதி செய்யப்பட்டது.
பின்னா், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தீவிர சுருக்க திருத்தம்-2026 தொடா்பாக தோ்தல் ஆணையத்தினால் எடுக்கப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது. மேலும், தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் தங்கள் கட்சியின் சாா்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவா்களின் விவரங்களை மாவட்டத் தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியா் என முகவரியிட்டு வரும் செப். 23-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
தோ்தல் வட்டாட்சியா் திருமலை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.