விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு பிரசாரம்
துத்திப்பட்டு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வீடுகள், கடைகள் தோறும் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், தெருக்களில் குப்பை கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் துண்டுப் பிரசுரம் வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் மளிகை கடை நடத்தி வரும் சிலருக்கு வெளியில் குப்பை இருந்ததை அடுத்து, ரூ. 500 அபராதம் விதித்து வட்டார வளா்ச்சி அலுவலா் எச்சரிக்கை செய்தாா்.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் பழனி வரவேற்றாா்.
மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.மகராசி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன், பிஎல்சி அலுவலா் ராஜேஷ், ஊக்குநா்கள் ரேகா, விமல், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.