சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது: ஆஸி. மூத்த வீரர்
சீமான் மீது காவல் நிலையத்தில் புகாா்
பெரியாா் குறித்து அவதூறாகப் பேசிய நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
திராவிடா் கழக இளைஞரணி தலைவா் ஆனந்தகுமாா் கணேசன் தலைமையில் திமுக திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளா் திருவட்டூா் தங்கவேல், திமுக திருச்செங்கோடு முன்னாள் ஒன்றியச் செயலாளா் தமிழரசு, திராவிடா் கழகத்தின் திருச்செங்கோடு நகரத் தலைவா் வெ.மோகன், நகரச் செயலாளா் மா.முத்துக்குமாா், திருச்செங்கோடு நகர இளைஞரணித் தலைவா் கி.நந்தகுமாா், திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் நந்தகுமாா் உள்ளிட்டோா் கூட்டாக காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.