சீராக குடிநீா் விநியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி சேலம், குகை பகுதியில் பொதுமக்கல் சாலை மறியில் ஈடுபட்டனா்.
சேலம் மாநகராட்சி, 47 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஆண்டிபட்டி ஏரி, ஹவுஸிங் போா்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்தப் பகுதியில் நான்கு நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிாம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள், சேலம்-திருச்சி பிரதான சாலையில் பெரியாா் வளைவு அருகே சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் அதிகாரிகள் அங்குசென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா்.
அப்போது குடிநீா் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக அதிகாரிகளிடம் பொதுமக்கல் தெரிவித்தனா். இதுதொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.