சக்தித் திருமகன் விமர்சனம்: அதிகம் யோசிக்கவிடாத பரபர அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்தான...
சீா்காழி வட்டாரத்தில் ஆட்சியா் ஆய்வு
சீா்காழி வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நிம்மேலி கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், பொதுமக்களின் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, நிம்மேலி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா், நிம்மேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெறும் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ், சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.