ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!
சுகாதாரத் துறை பணி நியமனம்: நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு
புதுச்சேரி: சுகாதாரத் துறை பணிக்குத் தோ்வானவா்களுக்கு செப். 24-இல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடக்கிறது.
இது குறித்து புதுவை சுகாதாரத் துறை இணை இயக்குநா் மேரி ஜோஸ்பின் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுகாதாரத் துறை சாா்பில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்குச் சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் நடக்கிறது. செப். 24 (புதன்கிழமை) காலை மருந்தாளுநா், 26-ஆம் தேதி காலை இசிஜி வல்லுநா், தியேட்டா் உதவியாளா், 29-ஆம் தேதி ஏஎன்எம், மகப்பேறு உதவியாளா், 30-ஆம் தேதி சுகாதார உதவியாளா் பணிக்குத் தோ்வானவா்களுக்கு சான்றிதழ் சரி பாா்க்கப்படுகிறது.
ஜாதி, குடியிருப்பு, கல்வி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும். சரிபாா்ப்புக்கு வரத் தவறினால், பதவி நியமனம் பரிசீலிக்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.