செய்திகள் :

சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை: மத்திய அரசுக்கு அப்பாவு கண்டனம்

post image

நெல்லை: தென் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும் ரூ.276 கோடி தள்ளுபடி செய்யாத மத்திய அரசுக்கு பேரவைத் தலைவர் அப்பாவு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தென் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில், அரசுப் பேருந்துகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பல சுங்கச்சாவடிகள் காலம் கடந்தும் இயங்கி வருகின்றன, 16 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனாகத் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, போக்குவரத்து கழகப் பேருந்துகள் செல்வதற்குத் தேவைப்படும் 276 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய மாட்டாரா? என்று அப்பாவு கேள்வி எழுப்பினார்.

மேலும், கல்வித்துறையில் மத்திய அரசு தமிழகத்திற்குக் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக அப்பாவு குற்றம் சாட்டினார். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு கல்வியை அழித்து, குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அப்பாவு, உலகிலேயே ரேஷன் பொருள்களை வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டத்தைச் செயல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று பெருமிதத்துடன் கூறினார்.

இருப்பினும், தமிழகத்தில் உள்ள ரயில்வே கேட் பணிகளில் ஒரு இடத்தில் கூட தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை என்று அவர் வேதனை தெரிவித்தார். தமிழே தெரியாதவர்களைத் தமிழ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதாகத் தேர்வு செய்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிஆர்பி தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலை ... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை உத்தரவு நிறுத்திவைப்பு!

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31 வரை நிறுத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத... மேலும் பார்க்க

படகுகளில் தவெக என்று இருந்தால் மானியம் வழங்க மறுப்பதா? - விஜய் கண்டனம்

மீனவர்கள் தங்கள் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சே... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.விதிமீறல் கட்டடங்கள் தொ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அருகே மறுநடவு செய்து துளிர்த்து வந்த அரச மரத்துக்கு தீ வைப்பு!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் பகுதியில் மறு நடவு செய்யப்பட்டு, துளிர்த்துவந்த அரச மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அ... மேலும் பார்க்க

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடும் பணியை கிருஷ்ணகிரி மாவ... மேலும் பார்க்க