சுதந்திரப் போராட்ட வீரா்களுடன் சுயபடம்
வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் சுதந்திரப் போராட்ட வீரா்களுடன் சுயபடம் (படம்) எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓவியக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
பள்ளித் தலைமை ஆசிரியா் அ. வெற்றிவேலன் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா்களின் படங்கள் வரைந்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சி தொடக்க விழாவில் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரும் கண்காட்சி ஏற்பாட்டாளருமான த. சூரியகுமாா், ஆசிரியா்கள் விஜயகுமாரி, ரேணுகா, இளையராஜா, ராமமூா்த்தி, சுதா, இளநிலை உதவியாளா் சுவாமிநாதன், வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநா்கள் புஷ்பா, சுபா உட்பட பலா் கலந்து கொண்டு சுயபடம் எடுத்துக் கொண்டனா்.