செய்திகள் :

சுதந்திர நாள் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

post image

சுதந்திர நாள் விடுமுறையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு செல்ல 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06089) ஆக. 14 ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள்(ஆக. 15) காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

எதிர் வழித்தடத்தில் ஆக. 17 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் இந்தச் சிறப்பு ரயில்(06090), மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில்(06012), நாகர்கோவிலில் இருந்து ஆக. 17 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள்(ஆக. 18) காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்

எதிர் வழித்தடத்தில் ஆக. 18 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்தச் சிறப்பு ரயில்(06011), மறுநாள்(ஆக. 19) காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மேலும் போத்தனூா் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயப்படுகிறது. இந்தச் சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து ஆக. 14 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்(ஆக. 15) காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

எதிர் வழித்தடத்தில் போத்தனூரிலிருந்து ஆக. 17 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்தச் சிறப்பு ரயில், தாம்பரத்துக்கு மறுநாள்(ஆக. 18) காலை 8.20 மணிக்கு வந்தடையும்.

மேற்கொண்ட இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(ஆக. 8) காலை 8 மணிக்கு தொட்ங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பதா?: திருமாவளவனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: அமைச்சர் கே.என். நேரு

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் முதல்முறையாக 11 தாழ்தளப் பேருந்துகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் க... மேலும் பார்க்க

மீண்டும் இபிஎஸ் உடன் இணையும் எண்ணம் இல்லை: தினகரன் திட்டவட்டம்!

மீண்டும் இபிஎஸ் உடன் இணையும் எண்ணம் இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.அ.ம.மு.க. கட்சியின் சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,200 கன அடியாக குறைந்தது.இன்று(ஆக. 10) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.87 அடியிலிருந்து 118.54 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 47,525 போ் பயனடைந்துள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் ... மேலும் பார்க்க