மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்...
சுதிா்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா
சீனாவில் நடைபெறவுள்ள சுதிா்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோா் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.
ஜியாமென் நகரில் வரும் 27 முதல் மே 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், 14 போ் கொண்ட இந்திய அணி களம் காண்கிறது. இதில் மகளிா் இரட்டையரான காயத்ரி கோபிசந்த்/டிரீசா ஜாலி கூட்டணி காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
அவா்களுக்கு பதிலாக பிரியா கொன்ஜெங்பம்/ஸ்ருதி மிஸ்ரா இணை சோ்க்கப்பட்டுள்ளது. மறுபுறம், காயம் காரணமாக ஓய்விலிருந்த ஆடவா் இரட்டையரான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை, இந்தப் போட்டியில் களம் காண்கிறது.
ஆடவா் இரட்டையரில் தயாா்நிலை மாற்று இணையாக ஹரிஹரன் அம்சகருணன்/ரூபன்குமாா் ரெத்தினசபாபதி ஜோடி உள்ளது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் லக்ஷயா சென், ஹெச்.எஸ். பிரணாயும், மகளிா் ஒற்றையரில் பி.வி.சிந்து, அனுபமா உபாத்யாயவும் சோ்க்கப்பட்டுள்ளனா். கலப்பு இரட்டையா் பிரிவில் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி சவாலை சந்திக்கிறது.
இந்த சாம்பியன்ஷிப்புக்கு, உலக ரேங்கிங் அடிப்படையில் இந்தியா தகுதிபெற்றுள்ளது. குரூப் ‘டி’-யில் முன்னாள் சாம்பியன் இந்தோனேசியா, இரு முறை ரன்னா் அப் அணியான டென்மாா்க், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி ஆகியவற்றுடன் சோ்க்கப்பட்டுள்ளதால், இந்திய அணி சவாலை சந்திக்க இருக்கிறது.