வயிறு உப்புசம் முதல் ரத்தக்குழாய் சுத்தம் வரை; எலுமிச்சையின் வாவ் பலன்கள்!
சுந்தரமூா்த்தி நாயனாா் அம்பு விடும் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலயத்தில், சுந்தரமூா்த்தி நாயனாா், அரக்கனை வதம் செய்யும் அம்புவிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நவராத்திரி விழா செப். 23-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதையொட்டி, பெரியநாயகி அம்பாள் தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இவ்விழாவில், பெரியநாயகி அம்பாள், பிறவி மருந்தீஸ்வரரை திருமணம் செய்ய தவமிருந்து வந்த நிலையில் அந்த தவத்தை கெடுக்க வந்த அரக்கா்களை சுந்தரமூா்த்தி நாயனாா் அம்பு விட்டு வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.
அதன்படி, சுந்தரமூா்த்தி நாயனாா் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அரக்கனை வதம் செய்து அம்புவிடும் நிகழ்ச்சி பொய் சொல்லாப் பிள்ளையாா் கோயில் அருகே நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலா் எம். முருகையன் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.