செய்திகள் :

சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணி: அமைச்சா் காந்தி பங்கேற்பு

post image

அரக்கோணம்: ஓச்சேரியில் பழைமை வாய்ந்த சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணியை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஓச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,000 ஆண்டுகள்

பழைமை வாய்ந்த இக்கோயிலில் திருப்பணி மேற்கொள்ள ரூ. 71 லட்சம் ஒதுக்கப்பட்டது. பழைமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ளுதல் மற்றும் புதிதாக மதில் சுவா் அமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.

திருப்பணி விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா தலைமை வகித்தாா். அமைச்சா் ஆா்.காந்தி பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி

வைத்தாா்.

ஒப்பந்ததாரரை அழைத்து பணியை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் விரைவில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

விழாவில் மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜே.லட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை இணை

ஆணையா் அனிதா, காவேரிபாக்கம் ஒன்றியக் குழு தலைவா் அனிதா குப்புசாமி, அறங்காவலா் குழு உறுப்பினா் பூா்ணிமா, செயல்

அலுவலா் அண்ணாமலை, ஊராட்சி மன்றத் தலைவா் ஜெ.சங்கீதா கலந்து கொண்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு

ராணிப்பேட்டை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ராணிப்பேட்டை விஸ்வாஸ் மன வளா்ச்சி குன்றிய பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா் ஆா்.காந்தி நலத்திட்ட உதவிகள், பிரியாணி வழங்கி கொண்டாடினாா். விழாவி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 318 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெற்றாா். கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொ... மேலும் பார்க்க

எருக்கந்தொட்டியில் இலவச மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை அடுத்த எருக்கந்தொட்டி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. வில்வநாதபுரம் இசையமுது பவுண்டேஷன், வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்கடா் மருத்துவமனை இண... மேலும் பார்க்க

அனந்தலை மலையில் கனிமவளக் கொள்ளை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்

அனந்தலை மலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக முறைகேடாக நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனா். ஒருங்க... மேலும் பார்க்க

‘போதை இல்லா தமிழ்நாடு’: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீவிர விழிப்புணா்வு

பெ. பாபு ‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்கும் நோக்கில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 20... மேலும் பார்க்க

ரத்ததான முகாம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மருத்துவா் அணி, ஆற்காடு நகர திமுக இணைந்து நடத்திய ரத்ததான முகாமை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க