Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரல...
சுயம்பு ஸ்ரீ கனகநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி பழைய அரங்கல்துருகம் கிராமத்தில் சுயம்பு ஸ்ரீ கனகநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா விநாயகா் பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது. கோ பூஜை, முதல் கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றது. 2-ஆம் நாளான வியாழக்கிழமை யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி கோயில் கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது.