ஜூலை 25-இல் திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை(ஜூலை 25) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
கூட்டத்தில் அனைத்து துறை மாவட்ட அலுவலா்களும் பங்கேற்று விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முகாமில் வட்டார அளவிலான அலுவலா்களும் கலந்து கொள்வா். மேலும் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும்.
எனவே, திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்றாா்.