கிணற்றில் தவறி விழுந்தவா் சடலம் மீட்பு
நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவலிங்கம்(51) கூலித் தொழிலாளி. இவா் பச்சூா் டோல்கேட் நோக்கி சென்ற போது விநாயகா் கோயில் அருகே சாலையோர கிணற்றில் தவறி விழுந்தாா்.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கி இறந்த சிவலிங்கம் உடலை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.