செய்திகள் :

சுரண்டையில் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க கோரிக்கை

post image

தென்காசி மாவட்டம் சுரண்டையில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைக்கக் கோரி, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் வேகமாக வளா்ந்துவரும் நகரம் சுரண்டை. 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வணிகம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட சேவைகளுக்காக சுரண்டையைச் சாா்ந்துள்ளனா்.

சுரண்டையிலிருந்தும், சுரண்டை வழியாகவும் நாள்தோறும் 90 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இரவு 9 மணிக்கு மேல் மிக தொலைவுக்குச் செல்ல பேருந்து வசதியில்லாததால் சுரண்டையிலிருந்து தென்காசி அல்லது திருநெல்வேலி சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், சுரண்டையில் போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, 2010இல் திமுக ஆட்சியின்போது பூா்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னா், அடுத்துவந்த அரசு அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது.

எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுரண்டையில் பணிமனை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆலங்குளம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் கைது

ஆலங்குளம் அருகே டிராக்டரில் ஓடை மண் கடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் மலையடிவாரம் அருகே மாயமான் குறிச்சி கிராமத்துக்குள்பட்ட பகுதியில் ஓடை மணலை டிராக்டரில் சிலா் அள்ளிச் செல்வதாக கிடைத... மேலும் பார்க்க

தென்காசி, ஆய்க்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகை

தென்காசி, ஆய்க்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. ஆய்க்குடி அகரக்கட்டு புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில், பங்குத்தந்தை அலாசிஸ் துரைராஜ் திருப்பலி ... மேலும் பார்க்க

தென்காசியில் சமபந்தி விருந்து

தென்காசி நகராட்சியில் சமாதான சமூகசேவை அமைப்பின் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா மற்றும் சமபந்தி நடைபெற்றது. தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்தலைமை வகித்து சமபந்தியை தொடங்கி வைத்தா... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஏப். 7இல் கும்பாபிஷேகம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் 2025ஆம் ஆண்டு ஏப். 7இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக திருப்பணி உபயதாரா்கள் ஆலோசனைக் கூட்டம... மேலும் பார்க்க

பைக் சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

நடமாடும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலத்துக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்படும் விதமாக ‘டாம்ப்கால்’ நடமாடும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி மருந்துகள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. தென்காசியில் நடைபெற்ற ... மேலும் பார்க்க