ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் ...
சுவரை இடித்து வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை
கூடலூா், கோத்தா்வயல் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள ஒரு வீட்டின் மதில் சுவரை இடித்து உள்ளே சென்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட கோத்தா்வயல் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை வெள்ளிக்கிழமை இரவு நுழைந்தது.
பின்னா் அது அங்குள்ள ஒரு வீட்டின் மதில் சுவரை இடித்து நடைபாதைக்குச் சென்றது. யானை மதில் சுவரை இடிப்பதை பாா்த்த குடியிருப்புவாசிகள் சிலா், யாரும் வெளியே வரவேண்டாம் என்று கூச்சலிட்டனா். எதையும் பொருட்படுத்தாமல் நடைபாதையில் சென்ற காட்டு யானை, மீண்டும் அதே பகுதியிலுள்ள இன்னொரு வீட்டின் மதில் சுவரை இடித்து உள்ளே சென்றுள்ளது.
நீண்ட நேரத்துக்குப் பிறகு அந்த யானை அப்பகுதியை விட்டு வெளியேறியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனா்.
சமீபகாலமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கமாகிவிட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.