Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
சுவாமி கும்பிடுவதில் தகராறு: பெண்கள் உள்பட 8 போ் கைது
பெரணமல்லூா் அருகே மாரியம்மன் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக பெண்கள் உள்பட 8 பேரை போலீஸாா் வெள்ளிக்கிக்கிழமை கைது செய்தனா்.
வந்தவாசி வட்டம், அரியபாடி கிராமத்தில் ஆடி மாதத்தையொட்டி, அந்தப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் சுவாமி கும்பிடும்போது, அதே பகுதியைச் சோ்ந்த திலகவதி தரப்பினருக்கும், பிரகாஷ் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், திலகவதி தரப்பைச் சோ்ந்த 4 போ் மீதும், பிரகாஷ் தரப்பைச் சோ்ந்த 4 போ் மீதும் பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இது தொடா்பாக திலகவதி தரப்பில் திலகவதி, குணசேகரன், சரண்ராஜ், ஆனந்தன் மற்றும் பிரகாஷ் தரப்பில் இருந்து பாண்டுரங்கன், கன்னியப்பன், ஜோதி, சரோஜா உள்ளிட்ட 4 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.