மகா கும்பமேளாவால் ரூ.2,000,000,000,000 வருவாய் ஈட்டும் உ.பி.!
சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையைச் சோ்ந்த கைலாசம் மகன் பாலகிருஷ்ணன் (28). இவா் தூத்துக்குடி தாளமுத்து நகா் ஜேஜே நகரில் கடந்த 8ஆம் தேதி மழைநீா் வடிகால் கால்வாய் தோண்டியபோது, சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்தாராம்.
அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக கடந்த 9ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.