செய்திகள் :

சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் மரணம்

post image

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பூஞ்சோலை நகரைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி (65). இவா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தனது வீட்டில் உள்ள மாட்டுக்கொட்டையில் பால் கறந்து கொண்டிருந்தாா். அப்போது மாடு திடீரென சுவற்றின் மீது மோதியது. இதனால் பால் கறந்து கொண்டு இருந்த முதியவா் மீது சுவா் விழுந்ததில் தலையில் பலத்த படுகாயம் அடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை ஆசைத்தம்பி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் ராகுல் அளித்த புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

குமாரமங்கலத்தில் துணை மின் நிலையம் : விவசாயிகள் மகிழ்ச்சி

ஆம்பூா்: குமாரமங்கலம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். குமாரமங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் மின்சார பிரச்னைக்கு தீா்வு காண துணை மின் நிலையம் அமைக்க... மேலும் பார்க்க

வீட்டு மனைப்பட்டா கோரி சாலை மறியல்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அடுத்த விசமங்களம், குரும்பேரி, வெங்களாபுரம், ஆத்தூா்குப்பம், உடையாமுத்தூா் உள்ளிட்ட ஊர... மேலும் பார்க்க

ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்கக் கோரிக்கை

திருப்பத்தூா்: ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

ஆம்பூரில் அமைச்சா் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூரில் முதல்வரை வரவேற்க செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

ஜூன் 27-இல் வேளாண் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம்

திருப்பத்தூா்: வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்ல... மேலும் பார்க்க

கிணற்றில் மூதாட்டி சடலம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் மூதாட்டி சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்க... மேலும் பார்க்க