சூதாட்டம்: 31 போ் கைது
திண்டுக்கல் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்த போலீஸாா், ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டியை அடுத்த அலக்குவாா்பட்டி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தாடிக்கொம்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.