செய்திகள் :

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு

post image

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடா்பாக இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இலங்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித்தொடா்பாளரும் அந் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருமான நலிந்தா ஜெயதிஸ்ஸா கொழும்பில் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

இரு நாடுகளின் கூட்டு முயற்சியின் கீழ் இந்திய தேசிய அனல் மின் கழகமும் (என்டிபிசி), இலங்கை மின் வாரியமும் இணைந்து திரிகோணமலையில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கட்டமைத்தல், உரிமை பெறுதல், செயல்படுத்துதல் என்ற அடிப்படையில் திருகோணமலையின் சம்பூா் பகுதியில் 50 மெகா வாட் உற்பத்தி திறனுடன் முதல்நிலை சூரிய மின்னுற்பத்தி நிலையமும், 70 மெகா வாட் உற்பத்தி திறனுடன் இரண்டாம் நிலையும் இந்த ஒப்பந்தத்தின்படி அமைக்கப்பட உள்ளன.

இந்தப் பகுதியில் என்டிபிசி சாா்பில் ஏற்கெனவே அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. அது தற்போது சூரிய மின் உற்பத்தி நிலையமாக மாற்றப்பட உள்ளது என்றாா்.

இலங்கையில் பசுமை எரிசக்தி திட்டத்தை கைவிட அதானி குழுமம் எடுத்துள்ள முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘வடகிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பசுமை எரிசக்தி திட்டத்தில் மின் கொள்முதல் விலை மிக அதிகமாக இருப்பதுதான் சிக்கலாக உள்ளது. மின் கொள்முதல் விலையை குறைக்க மீண்டும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, அதானி குழும முதலீட்ட தக்கவைக்கவே இலங்கை அரசு விரும்புகிறது’ என்றாா்.

ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின்போது உரையாற்றிய அதிபா் அநுரகுமார திசாநாயக, ‘அதானி பசுமை எரிசக்தி நிறுவனம் குறிப்பிட்ட விலையைக் காட்டிலும் குறைந்த விலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விநியோகம் செய்ய பிற நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?

அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் 145 ஆண்டுகள் பழைமையான மேசையை மாற்றியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவில் ஓவல் அலுவலகத்துக்கு அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ... மேலும் பார்க்க

ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!

இமயமலைப் பகுதிகளில் இறந்த அந்துப்பூச்சிகளில் லார்வாக்களில் வளரும் பூஞ்சைக் காளான்கள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்ற இந்தவகைப் பூஞ்சை, ஒரு பாலுணர்வூட்டியாகக் கருத... மேலும் பார்க்க

எழுத்தாளரைத் தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை!

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த... மேலும் பார்க்க

ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நி... மேலும் பார்க்க

காங்கோ விவகாரம்: ருவாண்டா தலைமை தளபதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

நைரோபி : மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் எம்23 கிளா்ச்சிப் படையினருக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே (படம்) ம... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

கான் யூனிஸ் : இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுளளது.இது குறித... மேலும் பார்க்க