மனநலப் பிரச்னைகளும் இன்ஸ்டாகிராம் ஐடிகளும்... என்ன நடந்துகொண்டிருக்கிறது சமூக வல...
சூர்யா இப்படி செய்திருக்கக் கூடாது: கௌதம் மேனன்!
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சூர்யா மீதான வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் மம்மூட்டியை வைத்து இயக்கிய டோமினிக் திரைப்படம் வருகிற ஜன. 23 ஆம் தேதி வெளியாகிறது.
இதில், துப்பறியும் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கான, புரமோஷன்களில் கௌதம் மேனன் கலந்துகொண்டு படம் குறித்தும் தன் திரை அனுபவங்கள் குறித்தும் பேசி வருகிறார்.
இதையும் படிக்க: விடாமுயற்சி - வித்தியாசமான தோற்றத்தில் அஜித்?
அப்படி, நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கௌதம் வாசுதேவ் மேனன், “துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது சூர்யாதான். ஆனால், அவர் படத்திற்குள் வரவில்லை. காக்க காக்க, வாரணம் ஆயிரம் என அவருக்கு வெற்றிப்படங்களைக் கொடுத்தும் சூர்யா துருவ நட்சத்திரத்தில் இணையாதது பெரிய வருத்தத்தைக் கொடுத்தது.
அந்தப் படத்தில் அவர் நடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சூர்யாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்திருக்குமா? கண்டிப்பாக இல்லை. ஆனாலும், அவர் முடியாது என சொன்னதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை” என்றார்.