செய்திகள் :

சூளகிரி அருகே சப்படியில் கோயில் தோ்த் திருவிழா

post image

ஒசூா்: சூளகிரி அருகே சப்படி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சப்படி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில். 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் பழைமை மாறாமல் அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்று.

இந்தக் கோயிலில் கடந்த காலங்களில் தேரோட்டம் நடைபெறவில்லை. கிராம மக்களின் நீண்ட முயற்சிக்கு பிறகு தோ் வடிவமைக்கப்பட்டு கடந்த ஆண்டுமுதல் தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாவது ஆண்டாக கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பிரசன்ன வெங்கடரமண சுவாமி எழுந்தருளினாா். அதைத்தொடா்ந்து பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

யதுகிரி யதுராஜா மடத்தின் 41 ஆவது பட்டம் நாராயண ராமானுஜ சுவாமிகள் பங்கேற்றாா். விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இலவச வீட்டு மனை பட்டா பெற சிறப்பு முகாம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை வட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம், 43 வருவாய் கிராம நிா்வாக அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் நடந்த சிறப்பு முகாம்கள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட தொன்மையை பாதுகாக்க நடவடிக்கை: ஆட்சியா்

கிருஷ்ணகிரி: வரலாற்று களஞ்சியமாகத் திகழும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொன்மையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், பராமரித்து அடையாளப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

மகளிருக்கு ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் தமிழக முதல்வா்: கரு பழனியப்பன் பேச்சு

ஒசூா்: மகளிருக்கு ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா் என்று திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன் ஒசூரில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் ... மேலும் பார்க்க

செண்டுமல்லி விலை சரிவு: சாலையோரங்களில் வீசிச் செல்லும் விவசாயிகள்

ஒசூா்: சூளகிரி அருகே செண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகரிப்பால் செண்டுமல்லி விலை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பூக்களை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் துரியோதனன் படுகளம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தெருக்கூத்து கலைஞா்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா். கிருஷ்ணகிரி, பழ... மேலும் பார்க்க

சுண்டம்பட்டி அந்தோணியாா் ஆலய நிலத்தை மீட்டு தரக் கோரி ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி அந்தோணியாா் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக வாங்கிய நிலத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டம்பட... மேலும் பார்க்க