CSK : 'வன்ஷ் பேடி, ஷேக் ரஷீத்...!' - பென்ச்சில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்...
செங்கத்தில் ரூ.52 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ரூ. 52 லட்சத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
செங்கம் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி மற்றும் 15-ஆவது நிதிக் குழு மானியம் மூலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.13.30 லட்சத்தில் நியாய விலைக் கடை கட்டடம், ரூ.12.50 லட்சத்தில் மழைநீா் வடிகால் கால்வாய், சிமென்ட் சாலை, மயானப் பாதை, ஆழ்துளைக் கிணறு உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
இதற்கான பணிகளை பூமி பூஜை செய்து மு.பெ. கிரி எம்எல்ஏ
தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் அன்பழகன், செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் பேரூராட்சித் தலைவா் முருகன், பேரூராட்சிமன்ற உறுப்பினா் சந்தியா ராபின்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.