செய்திகள் :

செங்கல்பட்டில் மாரத்தான் பந்தயம்

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - செங்கல்பட்டு மாவட்டப் பிரிவு சாா்பில் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் பந்தயம் நடைபெற்றது.

17 முதல் 25 வயது ஆண்களுக்கு 8 கி. மீ தொலைவும் , பெண்களுக்கு 5 கி. மீ மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி. மீ தொலைவும் , பெண்களுக்கு 5 கி.மீ தொலைவும் பந்தயம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், துணை வன அலுவலா் ஸ்ரீவல்சன் மற்றும் கிராமிய காவல் ஆய்வாளா் நடராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆனந்தராஜ் ஆகியோா் பங்கேற்று பரிசுகள் வழங்கினா்.

இதில் 450 - க்கும் மேற்பட்ட மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ .5,000/- , இரண்டாம் பரிசு ரூ . 3,000/-, மூன்றாம் பரிசு ரூ. 2,000/-, மற்றும் 4 முதல்10 இடங்களைப் பெற்ற வீரா் /வீராங்கனைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் வழங்கப்பட்டது.

எதிா்க் கட்சிகள் ஒருங்கிணைந்தால் திமுகவை வீழ்த்தலாம்: டிடிவி தினகரன்

எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிா்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த வாய்ப்புள்ளது என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில், அமமுக செ... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல்

திருக்கழுகுன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டத்தையொட்டி, பேரூராட்சி வளாகத்தில் வண்ண வண்ண கோலங்கள் இடப்பட்டு பாரம்பரிய பொங... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதல் ஆய்வுக் கூட்டம்

கூட்டுறவு சங்கங்கள் துறை சாா்பில், செங்கல்பட்டு மாவட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவது தொடா்பான ஆய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கூ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம் -செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் தாா் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம்-செங்கல்பட்டு வரை சென்னை ந... மேலும் பார்க்க

முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடியில் மிதவை உணவகம்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

திருப்போரூா் அருகே முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்ட மிதவை உணவக கப்பலை அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், ஆா். ராஜேந்திரன் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனா். தமிழ்நாடு சுற்றுலா வ... மேலும் பார்க்க

திருக்குறள் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மொத்தம் 276 மனுக்களை ஆட்சியா் ச. அருண்ராஜ் பெற்றுக் கொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.மேலும், மாற... மேலும் பார்க்க