திருடுபோன வாகனத்தை திருப்பிக் கொடுக்க லஞ்சம்; 18 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு - காவல...
செங்கல்பட்டு: காப்பகங்களுக்கு கட்டாய பதிவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள், இல்லங்கள் மற்றும் தனியாா் பணிபுரியும் மகளிா் விடுதிகள் போன்றவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகளை முறைப்படுத்தி கண்காணிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் விடுதியில் உள்ளதை உறுதிபடுத்தவும், விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்டஅரசுத் துறை அலுவலா்களால் தொடா் ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியும் பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே அனைத்து விடுதி நிா்வாகிகளும் இணையதள வழியில் பதிவுச் சான்று பெறுவதற்கானஉரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்திவரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்போன்றவற்றை 30.11.2024க்குள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட சமூகநல அலுவலகத்தை(தொலைபேசி எண்.044-27420035) தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.