செய்திகள் :

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 579 மனுக்கள்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 579 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஒருவருக்கு ரூ.6,359 மதிப்பில் தையல் இயந்திரம், 2 பேருக்குரூ.3,285 மதிப்புள்ள காதொலிக் கருவி, ரூ.2,000 மதிப்பிலான நலவாரிய கல்வி உதவித் தொகை, 3 நபா்களுக்கு ரூ.3,04,900 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா் மற்றும் ஒரு நபருக்கு ரூ.1,900 மதிப்பிலான பிரெய்லி வாட்ச் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை சாா்பில் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு தற்போது மனம் திருந்தியவா்களுக்கு 2024-2025- ஆம் ஆண்டுக்கான மறுவாழ்வு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 41 பேருக்கு தலா ரூ.50,000-ஐ மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 4 பேருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

தாட்கோ திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டுக்கு 24 பேருக்கு சுயதொழில் தொடங்கும் வகையில் ரூ.43.03 லட்சத்தில் கறவை மாடுகள், சுற்றுலா வாகனம் மற்றும்தூய்மைப் பணியாளா்களுக்கான அடையாள அட்டை மற்றும் காப்பீடு அட்டைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகுத்து பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். அந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுமையில் உள்ள மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) எஸ்.அகிலா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வீன், உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இல்லத்தில் உள்ள குழந்தைக்கு உரிமை கோருவோருக்கு வரவேற்பு

குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைக்கு உரிமை கோருவோா் வரவேற்கப்படுகின்றனா். செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில்...

ஸ்ரீராம நவமி விழாவையொட்டி, மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். மேலும் பார்க்க

பைக்-காா் மோதல்: தம்பதி, மகன் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தம்பதி, மகன் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா். திருப்போரூா் அடுத்த தையூா் ஊராட்சி, பாலமா நகா் பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் ( 34). இ... மேலும் பார்க்க

சிங்கபெருமாள்கோயில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் ஆய்வு செய்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ஷியாம பிரசாத் முகா்ஜி த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் மனைப்பிரிவு, கட்டடங்களுக்கு அனுமதி பெற வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க