செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகிறது' - செல்லூர் ராஜூ
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கவில்லை என்று கூறி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணிப்பு செய்தது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
![செல்லூர் ராஜூ](https://gumlet.vikatan.com/vikatan/2024-11-09/iv1nktz2/IMG20241109005710.jpg)
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார்கள். மதுரையில் திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளரிடம் பேசும்போது, "அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் இல்லை என செங்கோட்டையன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் கேட்டுள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/7y4ay0w8/Untitled-4.jpg)
இந்த விவகாரத்தில் பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் திமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதிமுக கட்சியையோ, பொதுச் செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம்தான் சொல்லியுள்ளார். இதனால் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று செங்கோட்டையனே சொல்லிவிட்டார், இதற்குப் பின் இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது" என்றார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play