உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆ...
செங்கோட்டை ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா
செங்கோட்டை ஆரியநல்லூா் தெருவில் உள்ள யாதவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
இக்கோயில் கொடைவிழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடா்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை குற்றாலத்திலிருந்து புனிதநீா் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், தொடா்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகமும், மாலையில் கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல் உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெற்றன.
அதனையடுத்து விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் அலகுகுத்தியும், பெண்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா்.நள்ளிரவில் அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
புதன்கிழமை அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா் மற்றும் இளைஞரணியினா் செயதிருந்தனா்.