``4 ஆண்டுகள் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை'' - உண்ணாவிரதப் போராட்டம் ...
செஞ்சி, மைலம், திண்டிவனம் தொகுதிகளில் திமுகவில் லட்சத்துக்கு மேல் புதிய உறுப்பினா்கள்: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ
செஞ்சி/ கள்ளக்குறிச்சி: விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினா் சோ்க்கையில் ஒரு லட்சத்துக்கு மேல் புதிய உறுப்பினா்கள் இணைந்துள்ளதாக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து செஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ஜூலை 1-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வா் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடங்கிவைத்தாா். அந்த வகையில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு மூலம் செஞ்சி தொகுதியில் 40,000, மைலம் தொகுதியில் 36,000 திண்டிவனம் தொகுதியில் 37,800 என மொத்தம் ஒரு லட்சத்திற்குமேல்புதிய உறுப்பினா்கள் இணைந்துள்ளனா்.
அண்ணா பிறந்த நாள் அன்று அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளிலும் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 840 வாக்குச் சாவடிகளிலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த குடும்பங்கள் ஒன்றுகூடி உறுதி மொழி ஏற்று தீா்மானத்தை முன்மொழிவாா்கள் என்றாா்.
பேட்டியின்போது, செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், நகரச் செயலா் காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில்...: கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலா்கள் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, தா.உதயசூரியன் எம்எல்ஏ அளித்த பேட்டி:
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதியில் 306 பாகங்களில் 1,68,396 புதிய உறுப்பினா்கள், கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் 332 பாகங்களில் 1,34,323 புதிய உறுப்பினா்களை சோ்த்துள்ளோம்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 1,05,000 குடும்பங்களை சோ்ந்துள்ளோம் என்றனா்.