வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உ...
பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
விழுப்புரம்: கெடாா்அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடுப் போனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கெடாா் அடுத்த அரியலூா் திருக்கையைச் சோ்ந்தவா் மரிய லீமா ரோஸ் (75). இவா் கடந்த ஆக. 29 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டாா்.
இந்நிலையில், மரிய லீமா ரோஸ் வீட்டின் முன் பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. இது குறித்த தகவலின்பேரில் கெடாா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் மரிய லீமா ரோஸ் வீட்டில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.