தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
மேல்மலையனூரில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைப்பு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் சிவன் கோயில் பகுதியில் இருந்து கொடுக்கன்குப்பம் கிராமம் செல்லும் சாலையை ரூ.89.24 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலையாக அமைக்க நடைபெற்ற பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில், சுரங்கம் மற்றும் கனிமத் துறை திட்டத்தின் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையில் கலந்துகொண்டு பணியை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கிவைத்தாா்.
மேல்மலையனூா் வட்டார கல்விக் குழு தலைவா் நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மேல்மலையனூா் மேற்கு ஒன்றியச் செயலா் சாந்தி சுப்பிரமணியன், ஒன்றியப் பொாறியாளா் நாராயணசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் யசோதை சந்திரகுப்தன், ஒன்றிய நிா்வாகிகள் அா்ஷத், செல்வம், ரவிச்சந்திரன், ஜி.பி.எஸ்.முருகன், எஸ்.பி.சம்பத், தோப்பு சம்பத், மேல் அருங்குணம் சந்திரன் உள்ளட்டோா் கலந்துகொண்டனா்.