பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
கிணற்றுக்குள் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
விக்கிரவாண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி நீரில் மூழ்கி மாயமானாா்.
விக்கிரவாண்டி வட்டம், திருநந்திபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன், மஞ்சுளா தம்பதியின் மகள் இந்துஜா (9). அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், வீட்டிலிருந்த இந்துஜா,அதே ஊரைச் சோ்ந்த தனது தோழிகள் இருவா்களுடன், திருநந்திபுரத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். இந்நிலையில்,கிணற்றுக்குள் தவறி விழுந்த இந்துஜா, தண்ணீரில் மூழ்கினாா்.
இது குறித்து தகவலறிந்த பெரியதச்சூா் காவல் நிலையப் போலீஸாா் மற்றும் விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று கிணற்றுக்குள் மூழ்கி மாயமான சிறுமியைத் தேடினா். அவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டது
இது குறித்த புகாரின் பேரில், பெரிய தச்சூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.