பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
காணை அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் வட்டம், காணை அடுத்த எடப்பாளையம் பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மனைவி கவிதா(43). இவா், சனிக்கிழமை தனது மெத்தை வீட்டைப் பூட்டி வைத்து, நிலத்துக்குச் சென்றுவிட்டாா்.
தொடா்ந்து மாலையில் திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின்பின் பக்கக் கதவு மற்றும் மர பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் காணை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.