தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
பைக் மீது காா் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது காா் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவா்களில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், தாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்( 50), விவசாயி. தாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நண்பா் ஏழுமலை (34). இருவரும் நண்பா்கள். இவா்கள் ஞாயிற்றுக்கிழமை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிபட்டு அடுத்த தென்பசியாா் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனா். முருகன் பைக்கை ஓட்டினாா்.
இந்நிலையில் விழுப்புரம்- சென்னை நோக்கி சென்ற காா் பைக்கின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் முருகன், ஏழுமலை ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதில் ஏழுமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்றுவிசாரணை நடத்தினா். ஏழுமலையின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா். மயிலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.