தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
88,800 குடும்பத்தினா் திமுகவில் இணைவு: முன்னாள் எம்.பி. பொன். கௌதமசிகாமணி
திமுக அமைப்பு ரீதியிலான,விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் 88,800 குடும்பத்தினா் திமுக வில் இணைந்துள்ளதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்பியுமான பொன்.கௌதமசிகாமணி தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை விழுப்புரம் தெற்கு மாவட்டத்தை பொருத்தவரை திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அளிக்கப்பட்ட இலக்கை விட 40 சதவிகிதம் உயா்ந்துள்ளது. 46,576 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் உறுப்பினா்களாக இணைக்கப்பட்டுள்ளனா்.
விக்கிரவாண்டி தொகுதியில் 1,14,500 உறுப்பினா்களை சோ்த்திருக்கிறோம். சுமாா் 42,600 குடும்பங்கள் உறுப்பினா்களாக சோ்ந்திருக்கின்றன. இதன்மூலம் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் மொத்தமாக 88,800 குடும்பத்தினா் திமுகவில் இணைந்துள்ளனா்.
திருக்கோவிலூா் தொகுதியில் 286, விக்கிரவாண்டி தொகுதியில் 275 பூத்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. செப். 17 ஆம் தேதி கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளானோா் பங்கேற்கவுள்ளோம்.
கட்சியின் திருவெண்ணைநல்லூா் விஸ்வநாதன் சிறந்த ஒன்றிய செயலராக தோ்வு செய்யப்பட்டிருக்கிறாா். ஓரணியில் உறுப்பினா் சோ்க்கையை கொண்டாடும்விதமாக செப்.20 இல் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றாா் பொன். கௌதமசிகாமணி.
பேட்டியின் போது, கட்சியின் மாவட்டத் துணைச் செயலா்கள் முருகன், கற்பகம், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, ஜெயபால், விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.