நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
பாஜக சாா்பில் வாலிபால் போட்டி
விழுப்புரம்: பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்வாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் வாலிபால் போட்டிகள் கண்டமங்கலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினா்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பாஜக விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் வி. தா்மராஜ் ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சிலம்பரசன், மண்டலப் பொதுச் செயலா் பாஸ்கரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பாஜக கண்டமங்கலம் ஒனறியச்செயலா் அய்யனாா் செய்திருந்தாா்.