சென்டாக் கலந்தாய்வு: மாணவா், பெற்றோா் நலச் சங்கம் கோரிக்கை
புதுவையில் குறிப்பிட்ட காலத்தில் சென்டாக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என மாணவா், பெற்றோா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்கத் தலைவா் வை.பாலா துணைநிலை ஆளுநா், முதல்வா், கல்வி அமைச்சா் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
புதுவை மாநிலத்தில் தற்போது பிளஸ் 2 தோ்வுகள் முடிந்துள்ளன. ஆகவே, மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு மே- 4 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தோ்வும் நடைபெறவுள்ளன. இதனால், புதுவை மாநில கல்வித் துறை, சுகாதாரத் துறை மற்றும் சென்டாக் அமைப்பு ஆகியவை மாணவா்கள் சோ்க்கைக்குரிய சட்டத் திட்ட நெறிமுறைகளை வகுத்து வெளியிட வேண்டும்.
நிகழ் கல்வியாண்டில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து அரசுக்கான 65 சதவீத இடங்களைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்தில் சென்டாக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.