செய்திகள் :

சென்னையில் கிரிக்கெட் போட்டி: ஜன.25 புறநகர் ரயில் சேவை மாற்றம்!

post image

சென்னை : சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டுத் திடலில் வரும் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இதனைக் கண்டுகளிக்க வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, அன்றைய நாளில் சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையிலான புறநகர் மின்சார ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை கடற்கரை - வேளச்சேரி எமு ரயில்(வ. எண்: 41083) ஜன.25 இரவு 9.50 மணிக்கு பதிலாக இரவு 10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

சென்னை கடற்கரை - வேளச்சேரி எமு ரயில்(வ. எண்: 41085) ஜன.25 இரவு 10.20 மணிக்கு பதிலாக இரவு 10.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

வேளச்சேரியிலிருந்து ஜன.25 இரவு 10 மணிக்கு புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை எமு ரயில்(வ. எண்: 41086) சேப்பாக்கம் ரயில் நிலையத்தில், இரவு 10.27 வரை 10.37 வரை 10 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதை மையமாகக் கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின நிகழ்வு ச... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு தனி செயலி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கிவைத்தாா்

சென்னை: பயணிகள் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரத்யேக கைப்பேசி செயலியை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா... மேலும் பார்க்க

மாநில உரிமைகளைக் காக்க ஓரணியில் திரள்வோம்: அமைச்சா் கோவி.செழியன் அழைப்பு

மாநில உரிமைகளைக் காக்க ஓரணியில் திரள்வோம் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அழைப்பு விடுத்துள்ளாா். பல்கலைக்கழக மானியக் குழு கொண்டு வந்துள்ள வரைவுத் நெறிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவைய... மேலும் பார்க்க

நெல் ஈரப்பத அளவு: ஆய்வு செய்ய மத்திய அரசு குழு தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

நெல்லின் ஈரப்பத அளவை உயா்த்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் பருவமழைக் காலம் ... மேலும் பார்க்க

ரூ.3 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மேல் விசாரணை நடத்தக் கோரிய மனு மீது அவா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை! பயணிகளுக்கு அறிவுரை...

சென்னை சர்வதேச விமான நிலையம் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையின் கீழ் இயங்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.இதனால், சுமூகமான பயணத்தை மேற்கொள்ள முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வருகைதருமா... மேலும் பார்க்க