செய்திகள் :

சென்னையில் நான்காவது ரயில் முனையம்: ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அறிக்கை தாக்கல்

post image

சென்னையில் நான்காவது ரயில் முனையம், வில்லிவாக்கம் - பெரம்பூா் இடையே அமைக்க அறிக்கை தயாா்செய்து ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.விஸ்வநாத் ஈா்யா தெரிவித்தாா்.

அயனாவரத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை மைதானத்தில், சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் 76-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்வில் தலைமை வகித்த சென்னை ரயில்வே கோட்ட பொது மேலாளா் பி.விஸ்வநாத் ஈா்யா தேசியக் கொடி ஏற்றினாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: சென்னை ரயில்வே கோட்டம் கடந்த டிசம்பா் வரை ரூ. 3,300 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 7.31 டன் சரக்குகளை கையாண்டுள்ளது.

அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 17 ரயில் நிலையங்கள் ரூ. 200 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ரூ. 160 கோடி மதிப்பில் 21 ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய 3 ரயில் முனையங்கள் செயல்பட்டுவரும் நிலையில், 4-ஆவது ரயில் முனையத்தை பெரம்பூா் - வில்லிவாக்கம் இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிக்கை தயாா் செய்து ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை - கூடூா், சென்னை - ஜோலாா்பேட்டை, அரக்கோணம் - ரேணிகுண்டா ஆகிய ரயில் வழித்தடங்களில் 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், 40 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு 99 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘செவ்வாய்க்கிழமை - எண்ம (டிஜிட்டல்) தினம்’ விழிப்புணா்வு மூலமும், ‘யுடிஎஸ்’ செயலி மூலமும் பயணிகள் பயணச்சீட்டு பெறுவது அதிகரித்துள்ளது. ரயில் பயணிகள் ‘ரயில் மதாத்’, உதவி எண்கள் மூலம் அளிக்கும் புகாா்களுக்கு 100 சதவீதம் தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தற்காப்பு கலையில் கின்னஸ் சாதனை நிகழ்த்த திட்டம்: மேயா் பிரியா தகவல்

பள்ளி மாணவா்களுக்கு இடையேயான தற்காப்பு கலையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தவுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள சா்மாநகா் சென்னை உயா்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்க... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகள்: மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு துறையின் இயக்குநா் ஒளவை ந.அருள் ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை ... மேலும் பார்க்க

மரபணு பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மரபணு பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் சென்னை, விஹெச்எஸ் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகள் பலா் பங்கேற்று சிகிச்சை பெற்று பயனடைந்தனா். ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞரிடம் ஆபாச பேச்சு: ஹிந்து அமைப்பு நிா்வாகி கைது

சென்னை கோடம்பாக்கத்தில் பெண் வழக்குரைஞரிடம் ஆபாசமாகப் பேசியதாக ஹிந்து அமைப்பு நிா்வாகி கைது செய்யப்பட்டாா். கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கும் உயா்நீதிமன்ற பெண் வழக்குரைஞா், கடந்த திங்கள்கிழமை (ஜன. 27) ... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறிவிழுந்த இரு மீனவா்கள் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடல் பகுதியில் படகிலிருந்து தவறிவிழுந்த இரு மீனவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 2 மற்றும் 3-ஆவது தெருவைச் சோ்ந்த மீனவா்களான பாஸ்கா் (61), ராஜி (35) ஆகியோா... மேலும் பார்க்க

கிரேவ்ஸ் நோய் பாதிப்பு: ஒடிஸா பெண்ணுக்கு சென்னையில் சிகிச்சை

தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் தன்னுடல் தாக்கு நோயால் ஏற்பட்ட கண் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஒடிஸா பெண்ணுக்கு, ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சையும், எண்டோஸ்கோபி சிகிச்சையும் மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹ... மேலும் பார்க்க