செய்திகள் :

சென்னையில் மலர்க் கண்காட்சி: முதல்வர் திறந்து வைக்கிறார்!

post image

சென்னையில் 4வது ஆண்டாக நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள்(ஜன. 2) தொடக்கி வைக்கிறார்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது.

சென்னை செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை சாா்பில், கடந்த 3 ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி தொடா்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டும் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: 2024 - அதிகரித்த ரயில் விபத்துகள்!

இதையொட்டி, சென்னை கண்காட்சிக்குத் தேவையான மலா்ச் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்தக் கண்காட்சிக்கு நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மலா்ச் செடிகள் உற்பத்தி செய்து, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி, ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை இந்த மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் மக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ. 150, சிறியவர்களுக்கு ரூ. 75-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன் மலர்கள் கொண்டு வரப்பட்டு மலர்க் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்... மேலும் பார்க்க

சிந்துவெளி: முதல்வர் வெளியிட்ட 3 முக்கிய அறிவிப்புகள்!

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்து 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த ஒரே அணியில் திரள வேண்டும்: டிடிவி தினகரன்

திமுகவை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.அனைத்து சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க. நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ... மேலும் பார்க்க

தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ரூ.2 கோடியில் ஆய்வு இருக்கை!

சிந்துவெளி குறித்து தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக அரசின... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இந்த வாரமும் 2 பேர் வெளியேற்றம்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் டிக்கெட் டூ ... மேலும் பார்க்க

சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்: முதல்வர் தொடக்கி வைத்தார்.

தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார்.சென்னை எழும்பூர் அருங்காட்சி... மேலும் பார்க்க