கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க!ஆக. 26 வரை காவல்!
சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
சென்னை: கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர் வரலட்சுமி(30). இவர் சனிக்கிழமை (ஆக.23) காலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தேங்கிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே வரலட்சுமி பலியானார்.
இதையடுத்து அந்த பகுதிகள் மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.