செய்திகள் :

சென்னையில் ரூ. 23 கோடி வைர நகைகள் கொள்ளை: தூத்துக்குடியில் 4 போ் கைது

post image

சென்னையில் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகளைக் கொள்ளையடித்தது தொடா்பாக, தூத்துக்குடியில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (70). விலையுயா்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறாா். இவா், மதுரையைச் சோ்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகள் விற்பனைக்கு உள்ளதாகவும், அவற்றை விற்றுத் தருமாறும் இடைத்தரகா்களை அணுகினாராம்.

அவா்கள் அந்த நகைகளை தாங்களே வாங்குவதாகத் தெரிவித்துள்ளனா். மேலும், சந்திரசேகரை ஞாயிற்றுக்கிழமை தொடா்புகொண்டு, சென்னை வடபழனியில் உள்ள தனியாா் விடுதியில் பணத்துடன் இருப்பதாகவும், அங்கு வந்தால் நகைகளை வாங்கிக் கொள்வதாகவும் கூறினராம்.

அதை நம்பி அங்கு சென்ற சந்திரசேகரை அந்தக் கும்பல் கட்டிப்போட்டுவிட்டு, நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியது. புகாரின்பேரில், தியாகராயநகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதுதொடா்பாக தமிழ்நாடு முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா்.

இதனிடையே, அந்தக் கும்பல் தூத்துக்குடிக்குச் செல்வதாகத் தெரியவந்தது. அதன்பேரில், தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது, அதில் வந்தவா்கள் சென்னையைச் சோ்ந்த ஜான் லாயட், விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜ் என்பதும், சென்னையில் வைர நகைகளைக் கொள்ளையடித்தவா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களை தனிப்படை போலீஸாா் கைது செய்து, சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இந்நிலையில், சென்னையிலிருந்து வந்த தனிப்படை போலீஸாா் அந்த 4 பேரையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனா்; காா், பறிமுதல் செய்யப்பட்ட வைர நகைகளையும் கொண்டு சென்றனா்.

என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா்கள் 18ஆவது நாளாக தொடா் போராட்டம்; மின் உற்பத்தி பாதிப்பு

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா்கள் 18 ஆவது நாளாக திங்கள்கிழமையும் மேற்கொண்ட தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை தி... மேலும் பார்க்க

படகில் சென்ற மீனவா் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவா் படகில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தைச் சோ்ந்தவா் ஜெயபால்(64). இவா், தருவைகுளம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம்: விஏஓ கைது

தூத்துக்குடியில் பட்டா மாறுதலுக்காக ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பண்டாரம்பட்டியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திருச்செந்தூா் நகராட்சி 23ஆவது வாா்டு தோப்பூரில் உள்ள புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி பகத்சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விஜய் ரசிகா்கள் பிரசார விடியோ வெளியீடு

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்துக்காக நடிகா் விஜய் ரசிகா்களால் பிரசார விடியோ வெளியிடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.அந்த பிரசார விடியோவில் நடித்துள்ள உறியடிசங்கா்தாஸ், இயக்கி... மேலும் பார்க்க