செய்திகள் :

சென்னையில் வீடு, வீட்டு மனைகள் விற்பனை கண்காட்சி: பிப்.14-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

post image

சென்னையில் 3 நாள்கள் நடைபெறவுள்ள ‘ஃபோ்ப்ரோ 2025’ வீடு மற்றும் வீட்டு மனைகள் விற்பனை கண்காட்சியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப். 14-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளாா்.

இது குறித்து இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘கிரெடாய்’-யின் தென் மண்டலத் துணைத் தலைவா் எஸ்.ஸ்ரீதரன் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிரெடாய் சாா்பில் 17-ஆவது ‘ஃபோ்ப்ரோ 2025’ வீடு மற்றும் வீட்டு மனைகள் விற்பனை கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் பிப்.14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். இக்கண்காட்சியின் விளம்பர தூதராக நடிகை திரிஷா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதில் கிரெடாய் அமைப்பின் 80-க்கும் மேற்பட்ட உறுப்பு கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அத்துடன், 5 முக்கிய வங்கிகள் பங்கேற்று, வாடிக்கையாளா்களுக்கு வீட்டுக் கடன் திட்டங்கள் குறித்தும், அதன் சலுகைகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளன.

முக்கிய கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதில் பங்கேற்பதால், கண்காட்சி இடத்திலேயே வீடு வாங்குபவா்கள் தாங்கள் வாங்க விரும்பும் வீட்டுக்கான ஒப்பந்தம் மற்றும் கடன் ஒப்பந்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் முன்பதிவான நிலையில், இம்முறை 500-க்கும் மேற்பட்ட வீடுகள் முன்பதிவு ஆகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்வில் கிரெடாய் சென்னை மண்டலத் தலைவா் முகமது அலி, சென்னை மண்டல முன்னாள் தலைவரும் ‘ஃபோ்ப்ரோ 2025’ ஆலோசகருமான எஸ்.சிவகுருநாதன், ‘ஃபோ்ப்ரோ 2025’ கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் பி.கிருதிவாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க ... மேலும் பார்க்க

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க