சென்னையைச் சோ்ந்த ரௌடி கைது
மதுரை தனியாா் விடுதியில் தங்கியிருந்த சென்னையைச் சோ்ந்த ரௌடியை சிறப்புக் காவல் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் கனகராஜ். இவா் மீது சென்னை எண்ணூா், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், அவா் மதுரை ஆரப்பாளையம் அருகே தனியாா் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சென்னை சிறப்புக் காவல் படை போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற கனகராஜை துப்பாக்கி முனையில் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவரை பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் சென்றனா்.