செய்திகள் :

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் பதவி ஏற்பு

post image

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் வியாழக்கிழமை பதவி ஏற்றாா். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.வினோத்குமாரை, சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று, அவரை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். அதன்படி, டி.வினோத்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதிபதி டி.வினோத்குமாருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். புதிய நீதிபதியை வரவேற்று தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பாா் அசோசியேஷன் தலைவா் எம்.பாஸ்கா், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ரேவதி, லா அசோசியேஷன் தலைவா் செல்வராஜ் ஆகியோா் புதிய நீதிபதியை வரவேற்றுப் பேசினா்.

இந்நிகழ்வில் புதிய நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட நீதிபதி டி.வினோத்குமாா் பேசுகையில், பாரம்பரியமிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். எனது பணி சிறக்க அனைவரது முழு ஆதரவும் வேண்டும் என்றாா்.

நீதிபதி டி.வினோத்குமாா் பதவி ஏற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 56-ஆக உயா்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 19-ஆகக் குறைந்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி - அரசு நிறுவனம் ஒப்பந்தம்

திடக் கழிவுகளை அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேலாண்மை செய்வதற்கு சென்னை ஐஐடி, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

மூட்டு - எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கான சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து 50... மேலும் பார்க்க

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

கலை, கலாசாரத்தை அறிந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள 99 அயலகத் தமிழா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் தமிழக பண்பாட்டுப் பயணத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து குவைத் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.சென்னையிலிருந்து குவைத் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வெள்ளிக்கிழமை மாலை 4.05-க்கு, சென்னை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.தாம்பர... மேலும் பார்க்க