ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் தொடங்கிய நாள் (மே 4) முதலே சென்னையில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. ஒருசில நாள்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகபட்சமாக வெப்பம் பதிவானது. இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றுக் குவிதல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வெப்பத்தை தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் மே 20-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (பகல் 10 மணி வரை) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காஸா முழுவதையும் இஸ்ரேல் கட்டுப்படுத்தும்: நெதன்யாகு